டெஸ்ட் தொடரை இழந்த உலகின் நம்பர் 1 அணி இந்தியா: தற்போது எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த போதும், டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா பறிகொடுத்தது.

இதன்மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 10 புள்ளிகளை இழந்தாலும் இந்திய அணி 115 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தொடர் ஆரம்பத்தில் 97 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி தற்போது 8 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்