ஆண்டர்சனால் 600 விக்கெட் வீழ்த்த முடியுமா? சவால் விடும் மெக்ராத்

Report Print Kabilan in கிரிக்கெட்
196Shares
196Shares
lankasrimarket.com

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஜேம்ஸ் ஆண்டர்சன், கும்ளேவின் 619 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 564 விக்கெட்டுகளை வீழ்த்தி அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மெக்ராத்தின் சாதனையை முறியடித்தார்.

மெக்ராத் 124 போட்டிகளில் 563 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள நிலையில், ஆண்டர்சன் 143 டெஸ்ட்களில் 564 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

AFP

இந்த சாதனை குறித்து ஆண்டர்சன் கூறுகையில், ‘நான் அழாமல் இருக்க முயற்சிக்கிறேன். எனக்கு இது மிகவும் சிறப்பு வாய்ந்த சாதனை. இது நான் இதுவரை செய்திராத ஒன்று. இங்கிலாந்து அணிக்காக மகிழ்ச்சியுடன் நான் விளையாடுகிறேன். அது ஒரு அற்புதமான பணி’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது சாதனையை முறியடித்தது குறித்து மெக்ராத் கூறுகையில், ‘ஆண்டர்சன் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். என்னுடைய சாதனையை அவர் கடந்துவிட்டார். அவரது அடுத்த இலக்கு 600 விக்கெட்.

ஆண்டர்சனால் 600 விக்கெட் எடுக்க முடிந்தால், அது வியக்கதகு முயற்சியாக தான் இருக்கும். அவருக்கு விருப்பம் இருக்கும் வரை அவர் விளையாடலாம். முதல் இடங்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் கும்ளேவின் 619 விக்கெட்டுகளையாவது கடக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்