இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் கருத்தால், விராட் கோஹ்லி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோபமாக பதிலளித்துள்ளார்.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி அங்கு தற்போது நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்று மிகவும் மோசமாக இழந்தது.
இதனால் இந்திய அணியை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர்.
ரவிசாஸ்திரியோ, கடந்த 15- 20 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போதைய இந்திய அணி செயல்படுவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிவது போல கடந்த 15- 20 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போதைய இந்திய அணி, சிறந்த அணி என நினைக்கிறீர்களா என பத்திரிக்கையாளர்கள் கேட்டுள்ளனர்.
அப்போது, ஆமாம் நாங்கள் அப்படி தான் நினைக்கிறோம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேட்டார்.
அதற்கு செய்தியாளர் இல்லை என கூற, உடனே கோஹ்லி அது உங்கள் கருத்து என மிகவும் கோபமாக கூறியுள்ளார். தற்போது ரவிசாஸ்திரியின் கருத்து விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியுள்ளது.