5 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்த இலங்கை மகளிர் அணி!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 5 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.

ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய - இலங்கை பெண்கள் அணி மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய பெண்கள் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 253 ரன்களை குவிந்திருந்தது.

இந்திய அணியின் சார்பாக மந்தனா 51 ரங்களும், கேப்டன் மிதாலிராஜ் 125 ரன்களும் குவிந்திருந்தனர். இதனையடுத்து களமிறங்கிய இலங்கை பெண்கள் அணி நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 257 ரன்கள் குவித்து வெற்றி வாகை சூடியது.

இதில் இலங்கை அணியின் சார்பாக, கேப்டன் அட்டப்பட்டு அபாரமாக விளையாடி 115 ரன்களை எடுத்திருந்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை போட்டியின் போது இந்திய அணியை வீழ்த்தியிருந்த இலங்கை அணி, தற்போது 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...