ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கானுக்கு அபராதம் விதித்த ஐசிசி

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.சி.சி-யின் நன்னடத்தை விதியை மீறியதாக, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ரஷித் கானுக்கு 15 சதவித அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கிண்ண தொடரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி ஆட்டம் இழந்து செல்லும்போது, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் அவரை நோக்கி சர்ச்சைக்குரிய வகையில் சைகை காட்டியுள்ளார்.

இது ஐ.சி.சி-யின் விதிமீறல் ஆகும். மேலும் ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் அஸ்கர், பாகிஸ்தான் வீரர் ஹசன் அலியை வேண்டும் என்றே தோளோடு தோள் உரசி சென்றார். பின்னர் ஹசன் அலி ஆப்கன் வீரர் ஹஸ்மத் துல்லாவை நோக்கி பந்தை எறிவது போன்று சைகை செய்தார்.

இந்நிலையில், நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஷித் கான், அஸ்கர் மற்றும் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி ஆகியோருக்கு, ஐ.சி.சி போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவித அபராதத்தை விதித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்