இது நிச்சயம் அவுட்! மீண்டும் அதில் தான் கிங் என்பதை நிரூபித்த டோனி

Report Print Santhan in கிரிக்கெட்

ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது டோனியின் ரிவ்யூ கணிப்பு மீண்டும் சரியாக இருந்ததால், அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4-ல் இன்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து தொடர்ந்து ஆடி வரும் இந்திய அணி சற்று முன் வரை 19.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியின் போது, வழக்கமாக டோனியின் ரிவ்யூ கணிப்பு சரியாகியுள்ளது. அதாவது ஆட்டத்தின் 8-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சஹால் வீசினார்.

அதை பாகிஸ்தான் அணி வீரரான இமாம் உல் ஹக் எதிர்கொண்டார். அப்போது பந்தானது அவரது கால்காப்பில் பட்டது.

இதனால் எல்பிடபில்யூ கேட்கப்பட்டது. ஆனால் நடுவர் அவுட் இல்லை என்று கூறியதால், டோனி உடனடியாக ரிவ்யூ கேட்கும் படி ரோகித்திடம் கூறினார்.

அது ரிவ்யூவில் அவுட் என்று தெரியவந்ததால், இந்திய வீரர்கள் அனைவரும் டோனியை பாரட்டினார். எப்போதுமே டோனி ரிவ்யூ கேட்டால் சரியாக இருக்கும், அந்த வகையில் இந்த முறையும் டோனியின் ரிவ்யூ கணிப்பு சரியாக இருந்ததால், இதை அவரது ரசிகர்கள் இணையத்தில் டிரண்டாக்கி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்