டோனி ஓய்வு பெற்ற பின்பு இந்த வேலை செய்யலாம்! வரவேற்பு குவியும் என சொன்ன முன்னாள் வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி ஓய்வு பெற்ற பின்பு டி.ஆர்.எஸ் ரிவீவ் எடுக்கும் வகுப்பை நடத்தலாம் அதற்கு வரவேற்பு குவியும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

ஆசியக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிரட்டி வருகிறது. இன்று இந்திய அணி, வங்கதேசத்துடன் இறுதிப் போட்டியில் மோதுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் டோனி கேட்ட ரிவுயூக்களுக்கு கை மேல் பலன் கிடைத்தது. செப்டம்பர் 23-ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், சஹால் வீசிய பந்து, இமாம் உல் ஹக்கின் பேடில் பட்டது.

இதற்கு நடுவர் அவுட் கொடுக்க மறுத்தார். ஆனால் டோனி ரிவீவ் கேட்குமாறு ரோகித் சர்மாவிடம் கூறினார். இந்த ரிவீவில் இமாம் அவுட்டானது தெரியவந்தது.

26-ஆம் திகதி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் முகமது மிதுனுக்கு எதிராக, பாகிஸ்தானின் பந்து வீச்சாளர் முகமது நவாஜ் ரிவ்யூ கேட்க சொல்ல, பாகிஸ்தான் தலைவர் சர்ப்ரஸ் அகமதும் ரிவீவ் கேட்டார். ஆனால் அது அதிகமாக சுழன்று ஸ்டெம்பின் வலது பக்கம் சென்றது ரீபிளேயில் தெளிவாக தெரிந்தது.

அப்போது கிரிக்கெட் போட்டி வர்ணனையாளராக பேசிக் கொண்டிருந்த ஆகாஷ் சோப்ரா, டோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் டி.ஆர்.எஸ் ரிவீவ் எடுக்கும் வகுப்பை நடத்தலாம். சர்வதேச அளவில் பல அணியின் தலைவர்கள் வகுப்பில் பங்கேற்க பதிவு செய்வார்கள், வரவேற்பும் குவியும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்