ஆசிய கிண்ண தோல்வி: பாகிஸ்தான் நட்சத்திர வீரர் அதிரடி நீக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஆசிய கிண்ண தொடரில் சொதப்பலான ஆட்டத்தினால் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான முகமது ஆமிர், சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி, பாகிஸ்தானை வெற்றி பெற வைத்தார்.

தொடர்ந்து அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஆமிர், அதன் பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை.

குறிப்பாக கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் ஆமிர் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கிண்ண தொடரிலும் அவரது செயல்பாடு சிறப்பாக இல்லை.

இந்நிலையில், அடுத்த மாதம் பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான பாகிஸ்தான் அணியில் இருந்து ஆமிர் கழற்றிவிடப்பட்டுள்ளார். அவரது மோசமான ஃபார்ம் காரணமாகவே அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆமிர், 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 6/44 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்