இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் தொடர்: அணிவிபரம் அறிவிப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்
210Shares

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுபயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

அக்டோபர் 4, முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

இதற்கான இந்திய அணி ஆசிய கிண்ணம் முடிந்த பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 1948 முதல் இதுவரை 94 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளன. அதில் இந்தியா 28 வெற்றி, 30 தோல்வி, 46 டிரா முடிவுகளை பெற்றுள்ளது.

அணி விபரம்

ஜேசன் ஹோல்டர் (தலைவர்), சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷூ, கிரேக் ப்ராத்வைட், ரோஸ்டன் சேஸ், ஷேன் டோவ்ரிச், ஷானன் காப்ரியல், ஜாமர் ஹாமில்டன், ஷிம்ரன் ஹெட்மயர், ஷாய் ஹோப், அல்சாரி ஜோசப், கீமோ பால், கீரான் பாவல், கீமர் ரோச், ஜோமல் வாரிகன்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்