ஆசிய கிண்ண இறுதிப்போட்டி: அபார சதம் விளாசிய வங்கதேச வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் வங்கதேச வீரர் லிதான் தாஸ் அபார சதம் விளாசியுள்ளார்.

துபாயில் தற்போது ஆசிய கிண்ண தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா-வங்கதேசம் மோதும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி துடுப்பாட்டத்தை துவங்கிய வங்கதேச அணியில், தொடக்க வீரர்களான லிதான் தாஸ்-மெஹிதி ஹசன் ஆகியோர் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 125 பந்துகளில் 120 ஓட்டங்களை குவித்தனர். இந்நிலையில், இதில் ஹசன் 59 பந்துகளில் 3 பவுண்டரிகள் 32 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய கேயஸ் 2 ஓட்டங்களிலும், முஷ்பிகுர் ரஹீம் 5 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய மிதுன் 2 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ரன்-அவுட் செய்யப்பட்டார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், அதிரடியில் மிரட்டிய லிதான் தாஸ் 87 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகளுடன் அபார சதம் விளாசியுள்ளார்.

தற்போது வரை வங்கதேச அணி 29 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

Getty

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்