இலங்கை வந்தடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி: கொழும்பில் உற்சாக வரவேற்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இன்று காலை இலங்கையின் கொழும்பு நகருக்கு வந்து சேர்ந்தது.

ஆசிய கிண்ண தொடரில் தோல்வியுற்று வெளியேறிய இலங்கை அணி, அடுத்ததாக இங்கிலாந்து அணியுடனான தொடரில் விளையாட உள்ளது.

இதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணி, ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி, வரும் 10ஆம் திகதி தம்புலாவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று காலை இலங்கையின் கொழும்பு நகருக்கு வந்து சேர்ந்தது. அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்தை சந்திக்கும் இலங்கை அணி, இம்முறை தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers