டோனி உடன் இருந்தது ரோகித்திற்கு வரப்பிரசாதம்: இந்திய அணியின் முன்னாள் வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

ஆசியக்கோப்பை தொடரில் டோனி இருந்தததால், இது ரோகித்சர்மாவிற்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் கூறியுள்ளார்.

சமீபத்தில் ரோகித் தலைமையிலான இந்திய அணி, ஆசியக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திச் சென்ற ரோகித்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவு அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

ஆனால் இதற்கான டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா இடம் பெறவில்லை. இதனால் அவருக்கு ஆதரவாக பல முன்னணி வீரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

முன்னாள் வீரரான கங்குலி, ஆசியக் கோப்பை வென்றதற்கு வாழ்த்துகள் ரோகித். நீங்கள் விதிவிலக்கானவர். ஒவ்வொரு முறையும் டெஸ்ட் அணியில் உங்கள் பெயர் இடம்பெறாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் இடம்பெறுவது அதிக தூரத்தில் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மற்றொரு முன்னாள் வீரரான கபில்தேவ் ஆசியக்கோப்பை தொடரில் ரோகித்சர்மாவின் ஆட்டம் அற்புதமாக இருந்தது.

ஆனால் அதே சமயம் இந்த தொடரில் டோனி இருந்தார். அது அவருக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும், சொல்லப்போனால் இது ரோகித்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று தான் கூறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers