ஜொலிஸ்­ரார் கிரிக்கெட் தொடரில் KCCC அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது சென்றலைட்ஸ்!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

ஜொலிஸ்ரார் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­திய ஜொலிஸ்­ரார் வெற்­றிக் கிண்­ணத்­துக் ­கான துடுப்பாட்டத் தொட­ரில் சென்­ற­லைட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி சம்­பி­ய­னா­னது.

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் சென்­ற­லைட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து கே.ஸி.ஸி.ஸி விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற சென்­ற­லைட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி களத்­த­டுப்பை தீர்மானித்­தது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய கே.ஸி.ஸி.ஸி. விளை­யாட்­டுக் கழக அணி 33.3 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 153 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது.

அதி­க­பட்­ச­மாக சத்­தி­யன் 55 ஓட்­டங்­க­ளை­யும், சாம்­பவன் 40 ஓட்­டங்­க­ளை­யும், பிர­தாப் 23 ஓட்டங்களையும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் மயூ­ரன் 4 இலக்­கு­க­ளை­யும், ஜெரிக்­து­சாந் 3 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

154 ஓட்­டங்­க­ளைப் பெற்­றால் வெற்­றி­யென்ற இலக்­கு­டன் பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய சென்றலைட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி 30.3 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 5 இலக்­கு­களை இழந்து 154 ஓட்­டங்­க­ளைப் பெற்று வெற்­றி­பெற்­றது.

அதி­க­பட்­ச­மாக டார்­வின் ஆட்­டம் இழக்­கா­மல் 58 ஓட்­டங்­க­ளை­யும், ஜெரிக்­து­சாந் 41 ஓட்­டங்­க­ளை­யும், செல்­ரன் 33 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் பிர­தாப் 3 இலக்குகளையும், சாம்பவன் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers