எனக்கு இன்னும் வயசாகல! 5 சிக்ஸர்களுடன் 96 ஓட்டங்கள் விளாசிய யுவராஜ் சிங்

Report Print Kabilan in கிரிக்கெட்

விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில், பஞ்சாப் அணிக்காக விளையாடிய யுவராஜ் சிங் 96 ஓட்டங்கள் விளாசி தன்னை நிரூபித்துள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசரே தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் அணிக்காக யுவராஜ் சிங் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற பஞ்சாப்-ரயில்வே அணியிகளுக்கு இடையிலான போட்டியில், யுவ்ராஜ் சிங் 121 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 96 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன் மூலம், பஞ்சாப் அணி 284 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய ரயில்வே அணி 210 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. யுவராஜ் சிங் முன்பு போல் பீல்டிங்கில் செயல்படுவதில்லை என்றும், அவருக்கு வயதாகிவிட்டது என்று விமர்சனங்கள் எழுந்தன.

அதனால், இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்தது. எனினும், 2019ஆம் ஆண்டு தனது ஓய்வு முடிவு அறிவிப்பதாக யுவராஜ் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று 96 ஓட்டங்கள் எடுத்தது அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் தொடரந்து அவர் ஓட்டங்கள் குவித்து வந்தால், இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers