இளம் வீரர்களுக்கு விராட் கோஹ்லி கூறிய அறிவுரை: என்ன தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்கு தலைவராக விராட் கோஹ்லி திரும்பியுள்ளார்.

ஆனால் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக ப்ரித்வி ஷா, ஹனுமா விஹாரி மற்றும் மயாங்க் அகர்வால் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ப்ரித்வி ஷா, மயாங்க் அகர்வாலுக்கு இது முதல் டெஸ்ட் போட்டியாகும். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில்,

‘ஹனுமா விஹாரி, ப்ரித்வி ஷா மற்றும் மயாங்க் அகர்வால் ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளனர். அதற்காகத்தான் இம்மூவரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த மூவரும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும். இதனை ஒரு நிர்பந்தமாக நினைக்கக்கூடாது. இது ஒரு மகத்தான வாய்ப்பு, சிறப்பாக விளையாடினால் தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கும், பின்பு இந்திய அணியில் நிலையாக இடம் பிடிப்பார்கள்.

இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வரலாற்றில் இடம் பிடிப்போம். அறிமுக வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி, தங்களது திறமைகளை வெளிப்படுத்துவர். இது அவர்கள் வாழ்வின் முக்கிய தருணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என தெரிவித்துள்ளார்.

PTI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers