அறிமுக போட்டியிலேயே சச்சினை துரத்தி பல சாதனைகளை குவித்த இளம் இந்திய வீரர்!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கி தன்னுடைய அறிமுக ஆட்டத்திலே சதம் அடித்து இந்தியாவின் இளம் வீரர் பிரித்விஷா சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் கே.எல் ராகுல் - பிரித்விஷா துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆரம்பத்திலே அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கே.எல் ராகுல் ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார்.

மறுபுறம் நிலைத்து நின்று நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய இளம் வீரர் பிரித்விஷா தன்னுடைய அறிமுக போட்டியிலே 100 ரன்களை விளாசி சாதனை படைத்தார். தன்னுடைய இளம்வயதில் அறிமுக போட்டியிலே சதமடித்த இந்திய வீரர்களில் பிரித்விஷா, சச்சினுக்கு அடுத்த இடத்தினை பிடித்துள்ளார்.

அதேபோல உலக அளவில் இளம் வயதில் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் பிரித்விஷா நான்காவது இடத்திலும், அதிவேகமாக சதமடித்த வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் தவான், வெஸ்ட் இண்டீசின் டிவைன் ஸ்மித்தை தொடர்ந்து 3 வது இடத்தை பிடித்துள்ளார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி தற்போது 196 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே பறிகொடுத்துள்ளது. இந்திய அணியின் சார்பில் பிரித்விஷா 104 (115) ரன்களும், புஜாரா 85 (123) ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

முன்னதாக பிரித்விஷா, ராஞ்சி மற்றும் துலிப் டிராபி அறிமுக போட்டியிலும் சதமடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers