இலங்கை அணியின் மோசமான செயல்பாடுக்கு என்ன காரணம்? ரசிகர்கள் சொன்ன பதில்

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் செயல்பாடு சமீபகாலமக சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை. சில போட்டிகளில் வெற்றி பெற்றாலும், முக்கியமான தொடர்களின் போது, சொதப்பி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசியகோப்பை தொடரில் கத்து குட்டி அணிகளான ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகளிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

இதனால் அந்தணி கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

இப்படி இலங்கை சொதப்பி வருவதற்கு என்ன காரணம் இருக்கும் என்று பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியுள்ளது.

அதில் பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றிக் கொள்வதா? அணியின் தேர்வு சரியில்லையா? நன்றாக விளையாடும் வீரர்கள் உலகத்தரமான ஆட்டங்கள் கொடுப்பதில்லையா? இந்த பிரச்சனை துவக்கத்தில் இருந்தே இருக்கிறதா? மற்றும் இவை அனைத்துமா என்று கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு 47 சதவீதம் பேர் இதில் இருக்கும் அனைத்தும் எனவும், 23 சதவீதம் பேர் துவக்கத்தில் இருந்தே இந்த பிரச்சனை இருக்கிறது எனவும் 7 சதவீதம் பேர் பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றிக் கொள்வது எனவும் 11 சதவீதம் அணியின் தேர்வு எனவும் 8 சதவீதம் பேர் நன்றாக விளையாடும் வீரர்கள் உலகத்தரமான ஆட்டங்கள் கொடுப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் 2 சதவீதம் பேர் இதில் எதுவும் இல்லை என்றும் 1 சதவீதத்தின நிறைய உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்