தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட ஹர்பஜன் சிங்: பதிலடி கொடுத்த ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்
246Shares

இந்திய அணி வீரரான ஹர்பஜன் சிங் தேவையில்லாமல் வாயைக் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டார்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவு அணி தற்போது டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி கோஹ்லி, பிரித்வி ஷா, ஜடேஜா ஆகியோரின் அபார சதத்தால் 9 விக்கெட் இழப்பிற்கு 649 ஓட்டங்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடிய மேற்கிந்திய தீவு அணி, இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 6 விக்கெட் இழப்பிற்கு 94 ஓட்டங்கள் எடுத்து பலோ ஆன் ஆகும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணி வீரரான ஹர்பஜன் சிங் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தற்போது உள்ள மேற்கிந்திய தீவு அணி இந்தியாவில் நடைபெறும் ரஞ்சிக் கோப்பை தொடரில் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங்கின் இந்த பதிவு பலருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு சிலர் ஹர்பஜன் சிங் செயல் மரியாதாயற்றதாக உள்ளது என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்