அஸ்வினின் சுழலில் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்

Report Print Kabilan in கிரிக்கெட்

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், அஸ்வினின் அபார சுழற்பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 181 ஓட்டங்களில் சுருண்டுள்ளது.

இந்தியா-மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் துடுப்பாட்டம் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 649 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

விராட் கோஹ்லி, பிரித்வி ஷா மற்றும் ஜடேஜா ஆகியோர் அபாரமாக சதம் விளாசினர். பின்னர் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் இரண்டு 2 விக்கெட்டுகளை ஷமி வீழ்த்தினார்.

பின்னர் வந்த ஹோப்பின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். ஹெட்மையர் 10 ஓட்டங்களிலும், அம்ரிஸ் 12 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

எனினும், ரோஸ்டன் சேஸ் நிலைத்து விளையாடினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இந்நிலையில், இன்று 3வது நாள் ஆட்டத்தினை தொடங்கிய மேற்கிந்திய அணியில் சேஸ் மற்றும் கீமோ பவுல் இருவரும் ஓட்டங்களை குவித்தனர்.

எனினும் பவுல் 47 ஓட்டங்களில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து, சேஸ் 53 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்திருந்தது. எஞ்சியிருந்த இரண்டு விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியவுடன், மேற்கிந்திய தீவுகள் அணி 181 ஓட்டங்களுக்கு சுருண்டது. பிஷூ 17 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஷமி 2 விக்கெட்டுகளும், யாதவ், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தற்போது 468 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த மேற்கிந்திய அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. தொடக்க வீரர் பிராத்வெயிட்டின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.

PTI

Vivek Bendre

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers