மேற்கிந்திய தீவு அணியை மிரட்டிய இந்தியா: உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் எத்தனை வெற்றிகள் பெற்றுள்ளது தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, சமீபத்தில் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது.

அங்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளைவிட டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பினர்.

குறிப்பாக கோஹ்லியை தவிர மற்ற வீரர்கள் அந்தளவிற்கு விளையாடத காரணத்தினால் இந்திய அணி கடும் விமர்சனத்திற்குள்ளானது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவு அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சில சாதனைகளை செய்துள்ளது.

மேலும் உள்நாட்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெறும் 100-வது வெற்றி இது ஆகும். 266-வது டெஸ்ட் போட்டியில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த சாதனையில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் இந்திய அணி இணைந்துள்ளது.

அவுஸ்திரேலியா அணி 415 டெஸ்ட்களில் உள்நாட்டில் 238 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது.

இங்கிலாந்து தன் சொந்த மண்ணில் 515 போட்டிகளில் 217 வெற்றிகளை ஈட்டியுள்ளது. தென் ஆப்பிரிக்கா 230 போட்டிகளில் 104 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

1933/34-ல் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணி முதல் வெற்றியை 1952-ல் உள்நாட்டில் வென்றே சாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers