முரளி விஜய், கருண் நாயர் மீது பிசிசிஐ நடவடிக்கை?

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
179Shares
179Shares
ibctamil.com

இந்திய அணி வீரர்கள் முரளி விஜய், கருண் நாயர் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், 5 டெஸ்ட் போட்டிகளிலும் கருண்நாயர் உட்கார வைக்கப்பட்டார், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலும் நீக்கப்பட்டார்.

முரளி விஜய் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அணியிலிருந்தே நீக்கப்பட்டார்.

இவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்த, பிசிசிஐ நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, தேர்வுக்கொள்கைப் பற்றி பேசியதன் மூலம் விஜய், நாயர் மத்திய ஒப்பந்தத்தை மீறியுள்ளனர், குறிப்பாக முடிந்த தொடர்கள் பற்றி 30 நாட்களுக்கு கருத்து தெரிவிக்கக்கூடாது, ஹைதராபாத்தில் வருகிற 11ம் திகதி நடக்குமு் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்படும் என பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்