இளம் வீரர் பிரித்வி ஷா இந்திய அணியில் நிலைத்து நிற்பார்: சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

Report Print Kabilan in கிரிக்கெட்
128Shares
128Shares
ibctamil.com

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அதிரடியாக சதம் விளாசிய இளம் வீரர் பிரித்வி ஷா இந்திய அணியில் நிலைத்து நிற்பார் என சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார்.

ராஜ்கோட்டில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா, தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே 154 பந்துகளில் 134 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.

இதன்மூலம், முதல் டெஸ்டிலேயே சதம் விளாசிய இளம் வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். இந்நிலையில், பிரித்வி ஷாவின் ஆட்டம் குறித்து இந்திய முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில்,

‘பிரித்வி தன் வசம் அபரிதமான ஆட்டத்திறனை தன்னுள் கொண்டுள்ளார். அவருக்கு எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும். முதல் ஆட்டத்திலேயே பெரிய ஸ்கோரை அவர் எடுத்திருப்பது திருப்தி அளிக்கிறது.

உள்ளூரில் சிறப்பாக ஆடிய ஒருவர் அதே போல் சர்வதேச அளவில் முத்திரை பதிப்பாரா என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம். ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையில் சிந்தனை செய்வர். பிரித்வியை பொறுத்தவரை முதல் தடையை அவர் தாண்டி விட்டார்.

அணியில் தனது இடத்தை உறுதி செய்து விட்டார். மேலும் வேகமாக கற்று வருகிறார். வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர் ஆட்டத்திறமையை பின்பற்றுவார்.

பள்ளி அளவிலான ஆட்டத்தில், ஹாரிஸ் கிண்ண போட்டியில் 546 ஓட்டங்களை விளாசினார் பிரித்வி. அவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் ஜகதீஷ் சவான், என்னை பார்க்க வேண்டும் என பிரித்வி விரும்புவதாக தெரிவித்தார்.

அப்போது எதிர்காலத்தில் பிரித்வி இந்தியாவுக்கு விளையாடுவார் என அப்போதே தெரிவித்தேன். இது தான் எனது முதல் அனுமானம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்