மெண்டிஸ், மலிங்காவுடன் சாதனைப் பட்டியலில் இணைந்த குல்தீப் யாதவ்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், மூன்று வகை போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட், 2வது இன்னிங்சில் 5 விக்கெட் என மொத்தம் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் சர்வதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய 7வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அத்துடன், இந்திய அளவில் இந்த சாதனையை செய்யும் 2வது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் குல்தீப் யாதவ் பெற்றுள்ளார். இதற்கு முன்பு புவனேஷ்வர்குமார் இதனை செய்திருந்தார்.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா கூட செய்யாத சாதனையை, குறுகிய காலத்தில் குல்தீப் யாதவ் செய்துள்ளது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் மூன்று வகை போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்

  • டிம் சவுதி (நியூசிலாந்து)
  • உமர் குல் (பாகிஸ்தான்)
  • இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிக்கா)
  • அஜந்தா மெண்டிஸ் (இலங்கை)
  • லசித் மலிங்கா (இலங்கை)
  • புவனேஷ்வர்குமார் (இந்தியா)
  • குல்தீப் யாதவ் (இந்தியா)

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers