இலங்கையில் டிவி எடுக்காதா? தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட ரசுல் அர்னால்டு

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் முன்னாள் வீரரான ரசுல் அர்னால்டு இலங்கை அணியை கிண்டலடிப்பதாக நினைத்து தேவையில்லாமல் வாயை கொடுத்து ரசிகர்களிடம் மாட்டிக் கொண்டார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய திவு அணி, முதலில் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ஓவர்கள் ஆடியது. ஆனால் மேற்கிந்திய தீவு அணி இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்தே மொத்தம் 99 ஓவர்கள் மட்டுமே ஆடியது. 99 ஓவர்களில் இரண்டு முறை ஆல் அவுட்டானது. போட்டி இரண்டரை நாட்களில் முடிந்துவிட்டது.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ரசுல் அர்னால்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், டெஸ்ட் போட்டியை எந்த டிவியிலும் பார்க்க முடியவில்லை. போட்டி முடிந்துவிட்டதா என்று மேற்கிந்திய தீவு அணியை கிண்டல் செய்யும் விதமாக குறிப்பிட்டிருந்தார்.

இதைக் கண்ட இணையவாசிகள், இலங்கையை விட மேற்கிந்திய தீவு அணி நல்ல அணி தான், இலங்கையில் உள்ள கிராமங்களில் டிவி எடுக்காதா என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். மேற்கிந்திய தீவு அணியை கிண்டலடிப்பதாக நினைத்து அர்னால்டு வாங்கிக்கட்டிக்கொண்டுள்ளார் என்று தான் கூற வேண்டும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers