ஆசிய கிண்ண இறுதிப் போட்டி: மோசமான தோல்வியை தழுவிய இலங்கை அணி

Report Print Kabilan in கிரிக்கெட்
285Shares
285Shares
ibctamil.com

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை அணி 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி கிண்ணத்தை தவற விட்டது.

டாக்காவில் நடைபெற்ற ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில், இலங்கை-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய யாஷாவி, ராவத் இருவரும் அரைசதம் அடித்தனர். ராவத் 79 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர், யாஷாவி 113 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்த வந்த வீரர்களின் அபார ஆட்டத்தினால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு இந்தியா 304 ஓட்டங்கள் குவித்தது. பிராப்சிம்ரன் சிங் 65 ஓட்டங்களுடனும், ஆயுஷ் பதோனி 52 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில், நிபுன் தனஞ்செய 12 ஓட்டங்களில் அவுட் ஆனார். எனினும் நிஷான் 49 ஓட்டங்களும், பசிந்து சூரியபந்தரா 31 ஓட்டங்களும் எடுத்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர்.

ஆனால், அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நவோத் பரணவிதானா மட்டும் 61 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 48 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில், 38.4 ஓவர்களில் இலங்கை அணி 160 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் ஹர்ஷ் தியாகி அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சித்தார்த் தேசி 2 விக்கெட்டுகளும், மோஹித் ஜன்ங்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்