இந்திய அணியின் இளம் வீரரிடம் கோப்பையை கொடுத்து அழகு பார்த்த டோனி-ரோகித்: யார் அந்த அதிர்ஷ்டகார வீரர் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றிய பின்பு இளம் வீரர் கலில் அஹமது கிண்ணத்தை உயர்த்தி பிடித்த படி போஸ் கொடுத்திருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

முதல் தொடரிலே இவ்வளவு திமிரா என்று ரசிகர்கள் பலரும் அவரை விமர்சிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் கலில் அஹமது கிண்ணத்தை உயர்த்தி பிடித்த படி போஸ் கொடுத்தற்கு காரணம் டோனி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து கலில் அகமது கூறுகையில், இறுதிப் போட்டியின் வெற்றிக்கு பின்பு கிண்ணத்தை வாங்கிய பின்பு டோனி மற்றும் ரோஹித் என்னிடம் வந்து கிண்ணத்தை பிடிக்குமாறு கேட்டனர்.

இதைக் கேட்ட வாயடைத்து போய்விட்டேன், அந்த நிகழ்வை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

ஹாங்காங் அணிக்கு எதிராக தன் முதல் சர்வதேச அறிமுக போட்டியில் ஆடிய கலீல் அஹ்மது, துவக்கத்தில் தடுமாறினார். இந்திய பந்துவீச்சாளர்கள் யாருமே ஹாங்காங் அணியின் துவக்க இணையை பிரிக்க முடியவில்லை.

அவர்கள் 150 ஓட்டங்களுக்கு மேல் முதல் விக்கெட்டுக்கு சேர்த்து விட்டனர். கலீல் தனக்கு தெரிந்த அனைத்து வகையிலும் பந்து வீசியும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்போது, டோனி கலில்லிடம் வந்து இப்போது வீசும் அதே வேகத்தில், இன்னும் சற்று பந்து முன்னே செல்லும் வகையில் வீசு என்று கூறினார், அதே போல இரண்டு பந்துகளை வீசிய பின் விக்கெட் கிடைத்ததாகவும் கலில் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers