டோனி விளையாடுவது சந்தேகம்! அவருக்கு பதிலாக இந்த வீரருக்கு வாய்ப்பு? குழப்பத்தில் தேர்வு குழு

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் டோனி விளையாடுவது சந்தேகம் எனவும் அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பாண்டிற்கு இடம் கிடைக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேற்கிந்திய தீவு அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தற்போது டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடர் முடிந்தவுடன் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் டோனி விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் டோனிக்கு பதிலாக இந்த தொடரில் இளம் வீரர் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்படலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. டோனியை அணியில் இருந்து நீக்குவது என்பது சாதரண விசயம் இல்லை என்பதால் தேர்வு குழு குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் எதிர்வரும் அவுஸ்திரேலியா தொடரை கருத்தில் கொண்டு, கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்