டோனியை விட சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் இந்திய அணியில் நீக்கப்பட்டது ஏன்? பதிலளித்த பிரசாத்

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கான கதவுகள் அடைக்கப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவு அணி தற்போது டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 21-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த ஒருநாள் தொருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரிஷப் பாண்ட் அணியில் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

ரிஷப் பாண்டை காரணம் காட்டி, தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டிருப்பதாக கேள்வி எழுந்தது.

அதுமட்டுமின்றி கடந்த பல போட்டிகளில் படுமந்தமாக விளையாடிய டோனி மீது பல விமர்சனங்கள் எழுந்தபோதிலும் அவருக்குத் தேர்வாளர்கள் தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருகின்றனர்.

மூத்த வீரர், கேப்டன்ஷிப்பில் அனுபவமானவர் என்ற காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு எத்தனை நாட்களுக்கு அணியில் இடம் பிடிக்க முடியும். இங்கிலாந்து தொடரிலும் அவர் சோபிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து ஆசியக்கோப்பை தொடரில் 5 போட்டிகளில் களமிறங்கிய தினேஷ் 146 ஓட்டங்கள் சேர்த்தார். இவரின் சராசரி 48 ஓட்டங்களும், ஸ்டிரைக் ரேட் 71-ஆகவும் இருந்தது.

ஆனால், இது டோனியுடன் ஒப்பிடும் போது அதிகமாகும். டோனியின் ஆசியக்கோப்பை ஸ்டிரைக் ரேட் 62 மட்டுமே தினேஷ் கார்ததிக் சேர்த்த ஓட்டங்களை காட்டிலும் பாதியளவே டோனி சேர்த்தார். ஆனால், டோனிக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், தினேஷ் கார்த்திக் இந்த ஒரு தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவருக்கு இனி வாய்ப்புகளே கிடைக்காது என்பது போன்று சிலர் பேசி வருகின்றனர், அது முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார்.மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers