டோனியின் திடீர் முடிவால் ரசிகர்கள் ஏமாற்றம்: நான் இப்போது விளையாடுவது சரியல்ல என மறுப்பு

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி தற்போது தான் இருக்கும் துடுப்பாட்ட திறனுடன் ஜார்கண்ட் அணிக்கு விளையாடுவது சரியல்ல என்று கூறியுள்ளார்.

உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் ஜார்க்கண்ட் அணியின் காலிறுதி போட்டியில் டோனி விளையாடுவார் என்று தேசிய தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் அறிவித்திருந்தார்.

இதனால் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் அவரின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் முதன்மை பயிற்சியாளர் ராஜிவ் குமார், காலிறுதி போட்டியில் விளையாட விருப்பமில்லை என்று டோனி கூறியுள்ளார்.

தற்போது இருக்கும் துடுப்பாட்ட திறனுடன் நான் விளையாடுவது சரியல்ல என்று கூறி மறுத்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் ஜார்க்கண்ட் அணி சிறந்த வீரர்களுடன் அருமையான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

தனது பங்களிப்பு இன்றியே காலிறுதி வரை சென்றுள்ளது. எனவே அணியின் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்த விரும்பவில்லை என்று டோனி கூறியதாக அவர் தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்