தோல்விக்கு இது தான் காரணம்: கலங்கிய இலங்கை அணித் தலைவர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இலங்கை அணித்தலைவர் சண்டிமால் பேசியுள்ளார்.

இலங்கையில் சுற்றுபயணம் செய்து இங்கிலாந்து அணி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் மழை காரணமாக முடிவு கிடைக்கவில்லை.

நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் டக்வெர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோல்விக்கு பின்னர் பேசிய இலங்கை அணித்தலைவர் தினேஷ் சண்டிமால், எங்கள் அணியின் மோசமான பேட்டிங் தொடக்கம் தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

முக்கியமாக கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஓலி ஸ்டோன் பந்துவீச்சுக்கு எதிராக திணறினோம்.

ஆனாலும் பின்னர் மழை வந்த நேரத்தில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது.

முதல் எட்டு ஓவர்கள் வரை எங்கள் பேட்டிங் மோசமாக இருந்தாலும், பின்னர் அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்