டோனிக்கு அடுத்த இடத்தை பிடித்து இளம் இந்திய வீரர் சாதனை!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அணி ரிஷாப் பண்ட் தொடர்ச்சியாக மூன்று இன்னிங்சில் 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து சாதனைப் படைத்துள்ளார்.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி விளையாடி வருகிறது.

நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ரஹானே 75 ஓட்டங்களுடனும், ரிஷாப் பண்ட 85 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், 3வது நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய இந்திய அணியில், இளம் வீரர் ரிஷாப் பண்ட் 92 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், தொடர்ச்சியாக மூன்று இன்னிங்சில் 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த 2வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டின் 2வது இன்னிங்சில் சதம் விளாசிய ரிஷாப் பண்ட், அதன் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 92 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இதற்கு முன் இந்த சாதனையை, கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் டோனி இரண்டு முறை நிகழ்த்தியுள்ளதால் அவர் முதலிடத்தில் உள்ளார்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்