மைதானத்திற்குள் நுழைந்து திடீரென்று இந்திய வீரர் ரோகித்தின் காலில் விழுந்த ரசிகர்! கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் தொடரான விஜய்ஹசாரே தொடரில் ரசிகர் ஒருவர் ரோகித்தின் காலில் விழுந்தது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவு அணியுடன் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டெஸ்ட் போட்டிக்கான அணியில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா இல்லாததால், அவர் தற்போது உள்ளூர் தொடரான விஜய்ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.

காலிறுதிப் போட்டியில் பீகார் மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் பீகார் அணி நிர்ணயித்த 70 ஓட்டங்களை மும்பை அணி 13 ஓவர்களில் எட்டி அசால்ட்டாக வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் மும்பை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று உள்ளே நுழைந்த ரசிகர் ஒருவர் ரோகித் சர்மாவின் காலை தொட்டு வணங்கினார். உடனடியாக ரோகித் அவரை தட்டி எழுப்பினார்.

அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியில் டோனி, கோஹ்லி, ரோகித் போன்ற வீரர்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்