அவரது செயலால் மகிழ்ச்சி: விராட் கோஹ்லி புகழ்ந்தது யாரை தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளார் உமேஷ் யாதவை, அணித்தலைவர் விராட் கோஹ்லி வெகுவாக பாராட்டியுள்ளார்.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த டெஸ்டில் உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம், இந்திய மண்ணில் ஒரு டெஸ்டில் 10 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகளை கைப்பற்றிய 3வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இந்நிலையில், உமேஷ் யாதவின் அபார பந்துவீச்சை அணித்தலைவர் விராட் கோஹ்லி பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘இன்று நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள். நீங்கள் மூன்று நபர்களை பார்த்தீர்கள் என்றால், அவர்களது வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஹனுமா விஹாரி இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் அசத்தினார். பிரித்வி ஷா இந்த தொடரில் சிறப்பாக விளையாடி, தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றுள்ளார்.

ஆனால், நான் உமேஷ் யாதவை மட்டும் தனியாக வெளிப்படுத்த விரும்புகிறேன். முதல் 10 பந்திலேயே ஷர்துல் தாகூர் காயத்தில் வெளியேறிவிட்டார். இந்த போட்டியில் என்ன சாதித்தாரோ அதற்கு உமேஷ் யாதவ் முற்றிலும் தகுதியுடையவர்.

ஷமி மற்றும் ஷர்துல் இல்லாத இந்த போட்டியில் அவர் எப்படி முன்னின்று அணியை மேல்நோக்கி எடுத்துச் சென்றாரோ, அதை பார்க்க எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஆடுகளத்திற்குள் இறங்கி விட்டாலே உமேஷ் யாதவ் 100 சதவிதத்திற்கு மேற்பட்ட பங்களிப்பை அணிக்கு வழங்குவார்.

அவரது செயலால் நாங்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளோம். மிகவும் கடினமாக உழைத்தார். அவர் வாய்ப்பிற்காக காத்திருந்து, அதை சிறப்பாக கைப்பற்றிக் கொண்டார். உமேஷ் யாதவ் இங்கு 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers