அவுஸ்திரேலியா தொடரில் கண்டிப்பாக இவர் தேவை: தமிழக வீரருக்கு ஆதரவாக பேசிய முன்னாள் வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் முரளி விஜய்க்கு வாய்ப்பு தரவேண்டியது அவசியம் என்று முன்னாள் வீரர் குண்டப்பா கூறியுள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டதால், 2-0 என்று தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவு அணியுடன் 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த தொடர் முடிந்தவுடன், கோஹ்லி படை அவுஸ்திரேலியா செல்கிறது.

உள்ளூர் தொடரைப் போன்றே அவுஸ்திரேலியா தொடர் அவ்வளவு எளிதாக இருக்காது. இந்நிலையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிசிசிஐ தேர்வு குழுவினர் மீது தமிழக வீரர் முரளி விஜய கோபமாக பேசினார்.

இதனால் அவருக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்று சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாத், துவக்க வீரராக அவுஸ்திரேலியா மண்ணில் ஏற்கனவே முரளி விஜய் சாதித்துள்ளார். அதனால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு தருவது அவசியம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்