விமர்சனங்களுங்கு பதிலடி கொடுத்த இலங்கை வீரர் மெத்யூஸ்: ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Report Print Santhan in கிரிக்கெட்
565Shares

இலங்கை அணியின் நட்சத்தி வீரரான ஆஞ்சிலோ மெத்யூஸ் யோ-யோ உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை அணி வீரரான மெத்யூஸ் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசியக்கோப்பைத் தொடரில் கேப்டனாக அணியை வழி நடத்தி வந்தார்.

ஆனால் அவர் தலைமையிலான அணி ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற கத்து குட்டி அணிகளிடம் அடி வாங்கி, நாடு திரும்பியது.

இதனால் மேத்யூஸ் கடும்விமர்சனத்திற்குள்ளானார். அவரை கேப்டன் பதவியிலிருந்து விலகும் படி இலங்கை கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.

அதன் பின்னர் அவரும் தன்னுடைய கேப்டன் பதவியிலிருந்து விலகினார். தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து மேத்யூசை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நீக்கியது.

இப்படி ஒரே சமயத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டு, அணியில் இருந்து ஒதுக்கப்பட்டிருப்பது இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடற்தகுதியை நிரூபிக்கவில்லை என்பதனால் மேத்யூஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால், அணியில் இருந்து உங்களை நீக்கப் போகிறோம் என்று முன்னரே மேத்யூசிடம் அணி நிர்வாகம் கூறியதாகவும், அதற்கு பதிலளித்த மேத்யூஸ், வேண்டுமானால் எனக்கு பிட்ன்ஸ் டெஸ்ட் வையுங்கள் என்று கோரிக்கை விடுத்து இருந்ததாகவும் தகவல் வெளியானது.

ஆனால், அதனை கருத்தில் கொள்ளாத இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அவரை அணியில் இருந்து நீக்கியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இவர் கடந்த 15-ஆம் திகதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் யோ-யோ டெஸ்டில் வெற்றி பெற்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மெத்யூசிஸ் விளையாடுவதற்கு போதுமான உடற்தகுதி இல்லை என்று பலரும் விமர்சித்த நிலையில், யோ-யோ டெஸ்ட் வெற்றி மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்