ஐக்கிய அரபு அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா

Report Print Kabilan in கிரிக்கெட்

அபுதாயில் நடந்த ஐக்கிய அரபு அணிக்கு எதிரான டி20 போட்டியில், அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டி20 போட்டியில் அபுதாபியில் நேற்று நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதனைத் தொடர்ந்து, களமிறங்கிய அந்த அணி அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

ஓட்டங்களை குவிக்க முடியாமல் திணறிய ஐக்கிய அரபு அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷைமான் அன்வர் 44 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுத்தார்.

அவுஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டான்லேக் மற்றும் கால்டர் நைல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் எளிய இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா, 16.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இலக்கினை எட்டியது.

அந்த அணியின் தொடக்க வீரர் டி ஆர்கி ஷார்ட் அதிரடியாக 53 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

GETTY IMAGES

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...