இங்கிலாந்தை தெறிக்க விட்ட இலங்கை: 366 ஓட்டங்கள் குவிப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 366 ஓட்டங்கள் குவித்துள்ளது.

இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய டிக்வெல்லா, சமரவிக்ரமா இருவரும் இங்கிலாந்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இவர்களின் அதிரடியான கூட்டணி 19 ஓவர்களில் 137 ஓட்டங்கள் குவித்தது.

அரைசதம் கடந்த சமரவிக்ரமா 48 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து அணித்தலைவர் தினேஷ் சண்டிமலும் இங்கிலாந்து பந்துவீச்சை சோதித்தார்.

இதற்கிடையில் அரைசதம் கடந்த டிக்வெல்லா 5 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்டார். 97 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் அவர் 95 ஓட்டங்கள் விளாசினார். அதன் பின்னர் குசால் மெண்டிஸ், சண்டிமலுடன் கைகோர்த்தார்.

இந்த கூட்டணி இலங்கையை 250 ஓட்டங்களை கடக்க உதவியது. சிக்சர்களாக விளாசிய மெண்டிஸ் 33 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 56 ஓட்டங்கள் குவித்தார்.

பின்னர் வந்த வீரர்களும் தங்களது பங்குக்கு அதிரடியில் மிரட்டியதால், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 366 ஓட்டங்கள் குவித்துள்ளது. அணித்தலைவர் சண்டிமல் 73 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் டாம் குரான், மொயீன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், ரஷித், பிளன்கெட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். கடினமான இலக்கை நோக்கி இங்கிலாந்து தற்போது துடுப்பாட்டத்தில் இறங்கியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...