விராட் கோஹ்லிக்கு புது சவால் விடுத்த ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லி 38 சதங்கள் விளாசியுள்ள நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் புது சவால் விடுத்துள்ளார்.

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, தொடர்ச்சியாக 3 சதங்கள் விளாசியுள்ளார்.

இதன்மூலம் அவர் ஒருநாள் போட்டிகளில் 38 சதங்கள் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 24 சதங்கள் அடித்துள்ளதால், அவர் ஒட்டுமொத்தமாக 62 சதங்கள் விளசியுள்ளார். இதற்கு கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் சவால் ஒன்றை கோஹ்லிக்கு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்து, எந்தவொரு இந்திய துடுப்பாட்ட வீரரும் செய்யாத சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார்.

அவர் ஒரு மிகச் சிறந்த ரன் மெஷின். இந்த விளையாட்டை அப்படியே மேம்படுத்தி, 120 சதங்கள் அடிக்க வேண்டும். இதை உங்களுக்கு இலக்காக அமைத்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers