இலங்கை போர்டு லெவன் அணிக்கு எதிராக சதம் விளாசிய ஜோ ரூட்

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை போர்டு லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் அபார சதம் விளாசியுள்ளார்.

இங்கிலாந்து அணி இலங்கை சென்று விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி வென்ற நிலையில், நவம்பர் 6ஆம் திகதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இதற்கு முன்பாக, இலங்கை போர்டு லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து விளையாடுகிறது. நேற்று தொடங்கிய இந்த பயிற்சி ஆட்டத்தில், முதலில் ஆடிய இலங்கை அணி அபாரமாக விளையாடி 9 விக்கெட் இழப்புக்கு 392 ஓட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக கௌஷால் சில்வா 62 ஓட்டங்களும், சரத்சந்திரா 59 ஓட்டங்களும், சமரவிக்ரமா 58 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் பர்ன்ஸ் 47 ஓட்டங்கள் எடுத்தார்.

ஜென்னிங்ஸ் 13 ஓட்டங்களும், டென்லி 25 ஓட்டங்களும் எடுத்து அவுட் ஆகினர். அதன் பின்னர் அணித்தலைவர் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். 117 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் எடுத்திருந்த ரூட், ரிட்டையர்டு ஹர்ட் மூலம் பாதியில் வெளியேறினார்.

பென் ஸ்டோக்ஸ் 31 ஓட்டங்களும், பட்லர் 60 ஓட்டங்களும் சேர்த்தனர். இன்றைய ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 365 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers