ரசிகர்களிடம் கெத்து காட்ட நினைத்து அசிங்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா வீரர் இம்ரான் தாகீர்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கா வீரர் இம்ரான் தாகீர் கேட்ச் பிடித்தவுடன் அங்கிருந்த ரசிகர்களை நோக்கி குறும்புத்தனமாக செய்கை செய்தார், ஆனால் அதன் பின் நோ பால் என்று தெரிந்ததால் ஆக்ரோசமாக பந்தை தூக்கி வீசினார்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி அங்கு மூன்று ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதற்கிடையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கும், அவுஸ்திரேலியா பிரதமர் XI அணிக்கும் இடையேயான பயிற்சி ஆட்டம் கடந்த 31-ஆம் திகதி நடைபெற்றது.

இதில் அவுஸ்திரேலியா பிரதமர் XI அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் போது, தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா வீசிய ஓவரை அவுஸ்திரேலிய அணி வீரர் லெக் திசையில் தூக்கி அடித்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பீல்டர் இம்ரான் தாகீர் அற்புதமாக கேட்ச் பிடித்தார். அதன் பின் அங்கிருந்த ரசிகர்களை நோக்கி குறும்புத்தனமான செய்கை செய்தார்.

ஆனால் அதன் பின் பார்த்த போது, அந்த பந்து நோ பால் என்பது தெரியவந்ததால், ஆக்ரோசமாக பந்தை வீசினார். நோ பால் என்பதை அறிந்த அங்கிருந்த அவுஸ்திரேலியா ரசிகர்கள் கிண்டல் செய்யும் விதமாக கை தட்டி சிரித்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers