ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்த இளம் கிரிக்கெட் வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இளம் பந்துவீச்சாளர் ஒருவர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

23 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான சி.கே நாயுடு டிராபி கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற போட்டியில் புதுச்சேரி அணியும், மணிப்பூர் அணியும் மோதின.

இதில் புதுச்சேரி அணியை சேர்ந்த பந்துவீச்சாளர் சிதக் சிங் (19) அபாரமாக பந்துவீசினார்.

17.5 ஓவர்கள் வீசிய சிதிக் மொத்தமாக 10 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்.

இதன் காரணமாக மணிப்பூர் அணி முதல் இன்னிங்சில் வெறும் 71 ஓட்டங்களில் சுருண்டது.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers