தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் இடத்தை பறித்த இளம்வீரர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில், விக்கெட் கீப்பராக ரிஷாப் பண்ட் இடம்பிடித்துள்ளதால் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் விக்கெட் கீப்பர் இடம் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் டி20 தொடர் இன்று கொல்கத்தாவில் தொடங்க உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில், அனுபவ வீரர்களான டோனி, கோஹ்லி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, ரோஹித் ஷர்மா தலைமையில் 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டி20 அணிக்கு அடுத்த விக்கெட் கீப்பரை அடையாளம் காணவே டோனி நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதனால் விக்கெட் கீப்பர் என ரிஷாப் பண்ட்டின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் இடத்தை ரிஷாப் பண்ட் பிடித்துவிட்ட நிலையில், தற்போது டி20யிலும் அவரது இடத்தை பறித்துவிட்டதாக கூறப்படுகிறது.

எனினும், துடுப்பாட்ட வீரர்களுடன் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இடம்பெற்றுள்ளதால், அவர் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என தெரிகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers