தினேஷ் கார்த்திக், கர்னால் பாண்ட்யா அபாரம்: விண்டீஸ் பந்துவீச்சை நொறுக்கிய இந்தியா

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

முதலாவது டி20 போட்டியில் , வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதிய முதலாவது 20 ஓவா் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து ஷாய் ஹோப், ராம்தின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் முதல் இரண்டு ஓவரில் தலா 8 ஓட்டங்கள் அடித்தது. இதனால் அதிக ஓட்டங்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் உமேஷ் யாதவ் வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தில் ராம்தின் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து அதிரடி வீரர் ஹெட்மையர் களம் இறங்கினார். அணியின் ஸ்கோர் 22 ஓட்டங்களாக இருக்கும்போது ஷாய் ஹோப் 14 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். 28 ஓட்டங்கள் இருக்கும்போது ஹெட்மையர் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் தடுமாற ஆரம்பித்தது. பொல்லார்டு 14 ஓட்டங்களிலும், டேரன் பிராவோ(5), ரோவ்மேன் பொவேல்(4), பிராத்வைட்(4) வேளியேறினார்கள்.

குருணால் பாண்டியா அறிமுக போட்டியில் 4 ஓவர்கள் வீசி 15 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து பொல்லார்டை வீழ்த்தினார்.

குல்தீப் யாதவ் 4 ஒவரில் 13 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

8-வது வீரராக களம் இறங்கிய ஆலன் 20 பந்தில் 27 ஓட்டங்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்கள் எடுத்தது.

இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 110 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்தது.

110 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் அணித்தலைவர் ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

இதில் ரோகித் சர்மா 6(6), ஷிகார் தவான் 3(6), ரிஷாப் பாண்ட் 1(4), லோகேஷ் ராகுல் 16(22) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் இணை அணியின் ரன்ரேட்டை மெதுவாக உயர்த்தினர்.

அப்போது மணிஷ் பாண்டே19(24) ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் ஆனார். இறுதியில் தினேஷ் கார்த்திக் 31(34), கர்னால் பாண்ட்யா 21(9) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் இந்திய அணி 17.5 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 110 ஓட்டங்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் தாமஸ், பிரித்வொய்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers