ஒரே திசையை நோக்கி ஓடிய இரண்டு பேட்ஸ்மேன்கள்: இந்தியா போட்டியில் நடந்த ரன் அவுட்... வைரல் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான டி20 போட்டியில் நடந்த ரன் அவுட் வீடியோ வைரலாகியுள்ளது.

இரு அணிகள் மோதிய டி20 போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்தியா வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தனர்.

தொடக்க வீரர் ஹோப்க்கும், இரண்டாவதாக களமிறங்கிய ஹெட்மையருக்கும் 4வது ஓவரின் முதல் பந்தில் ரன் எடுப்பதில் ஏற்பட்ட குளறுபடியால் வேடிக்கையான ரன் அவுட் ஏற்பட்டது.

பந்தை அருகிலேயே ஃபைன் லெக்கில் இருந்த ராகுலிடம் அடித்துவிட்டு ஒரு ரன் எடுக்க முயன்றார் ஹோப். எதிர்த்திசையில் இருந்த ஹெட்மையர் சற்று தயக்கத்துக்குப் பின் ஓடினார்.

ரன் அவுட் ஆகிவிடுவோம் எனத் தெரிந்து உடனே பின்வாங்கிவிட்டார் ஹெட்மையர். ஆனால், அதற்குள் ஹோப் கிட்டத்தட்ட எதிர்ப்பக்கத்துக்கே வந்துவிட்டார்

இதற்குள் ராகுல் தன்னிடம் வந்த பந்தைப் பிடித்து தினேஷ் கார்த்திக்கிடம் மோசமாக முறையில் வீசினார். தினேஷ் கார்த்திக் தன் தலைக்கு மிக உயரத்தில் பறந்த பந்தை துள்ளிப் பிடிக்க முயன்றுகோட்டைவிட்டார்.

ஆனால், சரியான நேரத்தில் பின்னால் தயாராக காத்திருந்த மனிஷ் பாண்டே பந்தைப் பிடித்து ரன் அவுட் செய்தார்.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers