விராட் கோஹ்லியின் சாதனையை தகர்த்தெறிந்த பாகிஸ்தான் இளம் வீரர்! எதில் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் அஸாம் அதிவேகமாக 1000 ஓட்டங்கள் அடித்து, விராட் கோஹ்லியின் சாதனையை முறியடித்துள்ளார்.

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் தொடக்க வீரர் பாபர் அஸாம் அதிரடியாக 58 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்சருடன் 79 ஓட்டங்கள் குவித்தார்.

அவர் 48 ஓட்டங்களை கடந்தபோது டி20 போட்டியில் அதிவேகமாக 1000 ஓட்டங்களை கடந்தார். அதாவது, 26 இன்னிங்ஸ்களிலேயே ஆயிரம் ஓட்டங்களை எட்டியுள்ளார்.

இதன்மூலம், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியின் சாதனையை முறியடித்துள்ளார். கோஹ்லி 27 இன்னிங்ஸில் இந்த சாதனையை செய்திருந்தார்.

பாபர் அஸாம் 26 போட்டிகளில் 26 இன்னிங்ஸ்களிலும் பேட்டிங் செய்து 1031 ஓட்டங்கள் குவித்துள்ளார். இவரது சராசரி 54.26 ஆகும். இதில் 8 அரைசதங்கள் அடங்கும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்