டி20 போட்டியில் இந்தியா படைத்துள்ள சாதனை

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

உள்நாடு, வெளிநாடு என 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து ஏழு தொடர்களில் வெற்றி பெற்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இதன்மூலம் தொடர்ந்து ஏழு தொடர்களை வென்று இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

அதாவது நியூசிலாந்துடனான தொடரை 2-1 என்ற கணக்கிலும், இலங்கையுடனான தொடரை 3-0 என்ற கணக்கிலும், இலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் டிராபியையும், அயர்லாந்துடனான தொடரை 2-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்துடனான தொடரை 2-1 என்ற கணக்கிலும், மேற்கிந்திய தீவுகளுடனான தொடரை 2-0 எனவும் கைப்பற்றியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers