டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த டாப் 10 வீரர்கள்: இலங்கை வீரர் எந்த இடத்தில் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா அதிரடியாக 111 ஓட்டங்கள் விளாசி, அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அவர் 61 பந்துகளில் 7 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 111 ஓட்டங்கள் அடித்ததால், சர்வதேச டி20 போட்டிகளில் 2203 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச அளவிலும் அதிக ஓட்டங்கள் எடுத்த 2வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தற்போது வரை டி20யில் அதிக ஓட்டங்கள் குவித்த டாப் 10 வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.

  1. மார்டின் கப்தில் (நியூசிலாந்து) - 75 போட்டிகளில் 2271 ஓட்டங்கள்
  2. ரோஹித் ஷர்மா (இந்தியா) - 86 போட்டிகளில் 2203 ஓட்டங்கள்
  3. சோயிப் மாலிக் (பாகிஸ்தான்) - 108 போட்டிகளில் 2190 ஓட்டங்கள்
  4. பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) - 71 போட்டிகளில் 2140 ஓட்டங்கள்
  5. விராட் கோஹ்லி (இந்தியா) - 62 போட்டிகளில் 2102 ஓட்டங்கள்
  6. முகமது ஷஷாத் (ஆப்கானிஸ்தான்) - 65 போட்டிகளில் 1936 ஓட்டங்கள்
  7. முகமது ஹபீஸ் (பாகிஸ்தான்) - 89 போட்டிகளில் 1908 ஓட்டங்கள்
  8. திலகரத்னே தில்ஷன் (இலங்கை) - 80 போட்டிகளில் 1889 ஓட்டங்கள்
  9. ஜேபி டுமினி (தென் ஆப்பிரிக்கா) - 78 போட்டிகளில் 1858 ஓட்டங்கள்
  10. டேவிட் வார்னர் (அவுஸ்திரேலியா) - 70 போட்டிகளில் 1792 ஓட்டங்கள்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்