இலங்கைக்கு எதிரான டெஸ்ட் : இங்கிலாந்தின் அறிமுக வீரர் அசத்தல் சதம்

Report Print Kabilan in கிரிக்கெட்

காலேவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தின் அறிமுக வீரர் பென் ஃபோக்ஸ் சதம் விளாசினார்.

இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று காலேவில் தொடங்கியது. இலங்கையின் அபார பந்துவீச்சில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தது.

எனினும், அறிமுக வீரர் பென் ஃபோக்ஸ் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடினார். நேற்றைய ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஃபோக்ஸ் 87 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

இந்நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜாக் லீச் 15 ஓட்டங்களில் பெரேரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் பென் ஃபோக்ஸ் சதமடித்தார்.

அணியின் ஸ்கோர் 342 ஆக இருந்தபோது, 202 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 107 ஓட்டங்கள் எடுத்த ஃபோக்ஸ் அவுட் ஆனார். இதன்மூலம், இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இலங்கை தரப்பில் தில்ரூவன் பெரேரா 5 விக்கெட்டுகளும், லக்மல் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers