ஒரே ஓவரில் 43 ஓட்டங்கள்! புதிய வரலாறு படைத்த நியூசிலாந்து வீரர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், வீரர்கள் இருவர் ஒரே ஓவரில் 43 ஓட்டங்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளனர்.

நியூசிலாந்து வடக்கு மாவட்ட அணிக்கும், மத்திய மாவட்ட அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது. வடக்கு மாவட்ட அணியில் ஹாம்ப்டன், கார்டர் இருவரும் துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்தனர்.

போட்டியின் 46வது ஓவரை ஹாம்ப்டன் எதிர்கொண்டார். முதல் பந்தை பவுண்டரிக்கும், 2வது பந்தை சிக்சருக்கும் விளாசினார். ஆனால், 2வது பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்த பந்தையும் எதிரணி பந்துவீச்சாளர் நோ பாலாக வீசினார்.

அதையும் ஹாம்ப்டன் சிக்சராக மாற்றினார். அதற்கு அடுத்த பந்தில் ஹாம்ப்டன் ஒரு ரன் எடுக்க, கார்டர் தான் சந்தித்த மூன்று பந்துகளையும் சிக்சர்களாக பறக்க விட்டார். இதன்மூலம் அந்த அணிக்கு ஒரே ஓவரில் 43 ஓட்டங்கள் கிடைத்தன.

மேலும் அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்கள் எடுத்தது. ஹாம்ப்டன் 95 ஓட்டங்களும், கார்டர் 102 ஓட்டங்களும் விளாசினர். பின்னர் ஆடிய மத்திய மாவட்ட அணி 9 விக்கெட் இழப்புக்கு 288 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

கடந்த 2013ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற முதல்தரப் போட்டியில் 39 ஓட்டங்கள் எடுக்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், நியூசிலாந்து வீரர் 43 ஓட்டங்கள் அடித்து அதனை தகர்த்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்