ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த போல்ட்! பாகிஸ்தானை பந்தாடிய நியூசிலாந்து

Report Print Kabilan in கிரிக்கெட்

அபுதாபியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.

ராஸ் டெய்லர் (80), டாம் லாதம் (68) ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால், 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 266 ஓட்டங்களை நியூசிலாந்து எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஷதாப் கான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் முதல் 3 விக்கெட்டுகளை, நியூசிலாந்து பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் அடுத்தடுத்து வீழ்த்தி, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மூன்றாவது நியூசிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 34 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்னர் வந்த சோயிப் மாலிக் 30 ஓட்டங்களும், ஷதாப் கான் 7 ஓட்டங்களிலும் அவுட் ஆகினர்.

அணித்தலைவர் சர்ப்பராஸ் அகமது(64), இமாது வாசிம்(50) ஆகியோர் வெற்றிக்காக போராடிய நிலையில், பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் 219 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன்மூலம் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் போல்ட், பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers